Who we are
https://www.velalar.com.
வேளாளர் நாகரிகம்
இப்போதிருக்குந் தமிழ் நூல்களில் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்தில் வேளாளர்களும் அவர்களுக்கே சிறப்பாக உரிய உழவுதொழிலும் ஒருங்கேவைத்துச் சொல்லப் படுதல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று . தொல் காப்பியம் ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாகையால் , அதிற் குறிக்கப்பட்ட வேளாளர்கள் , அந் நூலுக்கும் முற்பட்ட காலத்திலேயே அஃதாவது ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயே உழவுதொழிலைக் கண்டறிந்து பெருக்கி , அதனால் தாமும் நாகரிகத்திற் சிறந்து , பிறரை யுஞ் சிறப்புறச்செய்து வாழ்ந்தமை புலனாம் . ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டு , ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோரிடத்திற் குடியேறிக் , கடைசியாக இப் பரத நாட்டிற் புகுந்த ஆரியர் , அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவுதொழிற் சிறப்பும் , அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையுங் கண்டு வியந்து , அவ் வேளா ளரை அண்டிப் பிழைக்கலாயினர் . வேளாளருந் தமக்குள்ள செல்வப் பெருக்காலும் , இரக்க நெஞ்சத்தாலுந் தம் பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமுந் தந்து பல வாற்றாலும் அவர்களைப் பாதுகாத்துவந்தனர் . ஆக
வேளாளர் என்னுஞ் சொல் ஈகையுடையார் என்னும் பொருளில் அவர்க்கே வழங்கிவரலாயிற்று . வேளாண்மை என்னுஞ்சொல் இங்ஙனம் பண்டுதொட்டு ஈகைப்பொருளில் வழங்குதல் , “ வேளாண்மை யுபகாரம் ஈகையும் விளம்பும் ” என்னும் பழைய திவாகரச் சூத்திரத்தால் விளங்கும் .
என்னழவுதொழிலோ மிகவும் வருத்தமான தொன்று . உழவுதொழிலைச்செய்பவர்கட்கே வருத்தம் தென்பது தெரியும் ; அதனைச் செவ்வையாய்ச் செய்து முடிப்பதற்கோ முன் பின் ஆராயும் நுண்ணறிவு வேண்டும் .. ஆதலால் , அதனைச் செய்வார்க்கே உயர்ந்த அறிவும் அவ் வறிவினைப் பயன்படுத்தும் முறைகளும் விளங்கும் . ஆத லினாற்றான் , வேளாளர்க்கு இரக்கமும் அறிவும் ஈகையுந் தொன்று தொட்டுவரும் இயல்புகளாகக் கூறப்படுகின்றன . தம்மையொத்த மக்கள் வறுமையாலும் நோயாலுந் துன்புறக் கண்டால் , அவர்க்குள்ள அத் துன்பத்தின் கொடுமையினை நினைந்துருகி, அவைதம்மைப் பொரு பாலும் மருந்தாலும் நீக்கவல்லவர்கள் வேளாளர்களே யாவர் . பிறர் தரும் பொருளைப்பெற்றுத் தம் மெய்வருந் தாமல் இல்லத்திருந்து இனிது காலங்கழிப்பவர்க்குப் , பிறர் படுந்துயர் தெரியாதாகையால் அன்னவர் வறியோர்க்கும் நோயாளர்க்கும் பிறர்க்குஞ் சிறிதும் இரங்கார் . ஆதலி னாற்றான் , வேளாளரல்லாத பிறர் பிறர்க்கு உதவிசெய்தல் அரிதாயிருக்கின்றது . ஈகையும் விருந்தோம்பலும் வேளா வர்க்கே சிறந்தனவாக வைத்து நூல்கள்
ஓதுதலும் பின்னே காட்டப்படும்
இனித் , தம்மோடொத்த மக்களின் துயர் களை தலே யன்றி , மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை கோழி கொக்கு முதலான சிற்றுயிர்கள் படுந் துன்பத்தையும் நன்குணர்ந்து , அவைகட்குத் தம்மாலும் பிறர் தம்மாலுந் தீங்குநேராதபடி கொல்லா அறத்தை வளர்க்கவல்ல ஆற்ற லும் வேளாளர்க்கே உரித்தாயிற்று .
உயிரோடிருக்கும் மக்களுக்கும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுக்கும் உதவியாற்றுதலோடு அமையாது , தம்மைப் பெற்று வளர்த்துப் பெரியராக்கிய தம் மூதாதை களின் பேருதவியையும் நினைந்து , அவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகங்கட்குச் சென்றபின்னும் , அவர்களது உயிர் தூய பிறவியையோ பிறவியொழிந்து இறைவன் திருவடியையோ அடையுமாறு இறைவனை வேண்டி வழுத்து தலும் வேளாளர்க்கே உரித்தாயிற்று .
இனித் , தமதறிவு வளர்ச்சிக்கும் முயற்சியின் ஈடேற் றத்திற்கும் இன்றியமையாத வழிவகைகளைக் காட்டி , அவ் விரண்டினுஞ் சிறந்த தம்முன்னோர்கள் எழுதிவைத்த நூல்களை ஓதி , அவ்வாற்றாற் கல்வியைப் பரவச்செய்தலும் வேளாளர்க்கே சிறந்ததோர் அறமாயிற்று . ஆகவே , ஈகைக்குப்
பெயரான
வேளாண்மை என்னுஞ்சொல் , அவ் வீகைக்குக் கருவியான
பயிர்த் தொழிலுக்கும் பெயராயிற்று . பின்னர் அவ்விரண்டு தாழில்களையும் ஆள்வா ரான ‘வேளாளர் க்கும் அது பெய ராயிற்று . இவ் வேளாளர் ஏனை மக்களை நோக்கிச் செய்யும் ஈகையும் விருந்தோம்பலும்
மக்கள் வேள்வி ( மா நுட யாகம் ) என
எனவும் , ஏனைச் சிற்றுயிர்களைப் பாதுகாத்தற் பொருட்டு அவர் மேற்கொண்டு ஒழுகுங் கொல்லா அறம் உயிர்வேள்வி ( பூதயாகம் ) எனவும் , இறந்து பட்ட தம் முன்னோரை நோக்கிச் செய்யும் நன்றிக்கடன் தென் புலத்தார் வேள்வி ( பிதிர்யாகம் ) எனவும் , இவ்வாறு பிறர்க் காற்றும் உதவி பயன் தரற்பொருட்டு இறைவனை நோ
செய்யும் வழிபாடு கடவுள் வேள்வி ( தேவயாகம் ) எனவுந் , தமக்கும் பிறர்க்கும் அறிவை விளக்கி முயற்சியைப் பயன் பெறுவிக்கும் நூலோ துமுறை கலைவேள்வி ( பிராமயாகம் எனவும் ஆன்றோரால் வகுத்துரைக்கப் பட்டன . எனவே , ஈகையும் ஈகைக்குக் கருவியாவனவும் , ஈகையைப் பாராட்டும் நன்றிக்கடனும் , ஈகையைப் பயன்படுத்துமாறு வேண்டும் வழிபாடும் வேள்வி என்னும் பெயர்க்கு இயைபுடையவாய் நிற்றல் கண்டுகொள்க . கொல்லா அறம் ,
சிற்றுயிர்கள் தத்தம் உடம்புகளில் நின்று அறிவு விளங்குதற்கு உதவி செய்வதாகலின் , அதுவும் வேள்வி என்னும் பெயர்க்குப் பெரிதும் உரிமை பூண்டு நிற்றல் கண்டுகொள்க. இங்ஙன மாக ஐவகை வேள்விகளையும் ஆள்பவராகலின் , பண்டைத் தமிழரில் உழவுதொழிலாற் சிறந்து நாகரிக வாழ்க்கையை வகுத்த நன்மக்கள் வேளாளர் எனப்படுவாராயின ரென்பது .
தாழிலை யறிந்து அதனைத் திறமையாகச் செய்யத் தெரியாத காலங்களில் , மக்கள் உண்ணப் போது மான உணவும் உடுக்கச் செவ்வையான உடையும் இன்றி மிகவும் மிடிப்பட்டு உயிர்வாழ்ந்தனர் ; காடுகளிலும் மலை களிலும் உள்ள மான் , மரை , கடம்பை , முள்ளம்பன்றி , ஆடு , மாடு முதலான விலங்கினங்களை அளவிறந்த வருத் தத்தோடு வேட்டமாடிக் கொன்று , அவற்றின் இறைச்சி யையும் அரிதிற் கிடைத்த காய் கனி கிழங்குகளையும் அயின்று , தழைகளையுந் தோலையும் உடுத்து , நாகரிகம் இன்னதென்றே தெரியாமல் மலைக்குகைகளிலும் மரப் பொந்துகளிலும் இருந்து காலங்கழித்தனர் . எவ்வளவோ தேடித்திரிந்தும் அவ் விலங்குகளும் காய் கனி முதலியன வும் அகப்படாத காலங்களிற் பட்டினியும் பசியுமாயிருந்து அவர்கள் பொறுத்தற்கரிய துன்பத்திற் கழித்த நாட்களும்
வேட்டுவ வாழ்க்கையில் இப்போதும் நாகரிகமின்றி உயிர்வாழும் மலைவாணருங் கானவரும் நிரம்பவும் மிடிப் பட்ட நிலையி லிருத்தலை நாம் இஞ்ஞான்றும் நேரே சென்று காணலாம் . இங்ஙனமாகப் பண்டைக்காலத்தில் வறுமையிற் கிடந்துழன்ற மக்களின் கொடுந் துன்பமெல்லாம் , உழவு தொழிலை முதன் முதற் கண்டறிந்த அறிவுடை நன்மக்க ளாலே தாம் நீங்கின . தமிழ்மக்களுள் வேளாளர் உழவு தாழிலைக் கண்டறிந்த பண்டை நாட்களில் , எகுபதி , சாலடி முதலான சிற்சில நாடுகளில் உறைந்த மக்கட் பகுதியினர் சிற்சிலரைத் தவிர , ஏனைப் பெரும்பாலார் எல்லாரும் உழவுதொழிலை அறியா ராய் வேட்டுவவாழ்க் கையிற் பெரிதும் வறுமைப்பட்டு வாழ்நாட் கழித்தனர் . வேளாளர் உழவு தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருகச் செய்த பண்டைநாளில் , ஆரியர் வேட்டுவவாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் டையர் வாழ்க்கையிலுமே இருந் தனர் . அதனாலேதான் , ஆரியரும் அவர் வழிப்பட்டாருஞ் செய்த நூல்களில் உழவுதொழில் இழித்துரைக்கப்பட் டிருப்பதோடு , அதனைத் தம் மினத்தவர் எவருஞ் செய்த லாகாதென்னுங் கட்டுப்பாடுங் காணப்படுகின்றது . ஆனா றமிழ வேளாளரோ அவ் வுழவுதொழிலைத் தமது நுண்
ணறிவாற் கண்டுணர்ந்து அதனைச் செவ்வையாகச் செய்து வந்தமையால் , அத் தொழில் வேளாளர்க்கே சிறந்ததாக வைத்து வடமொழி தென்மொழியிலுள்ள நூல்களெல்லாம் ஒருமுகமாய் நின்று ஒத்துரைப்பவாயின . இவ்வாறு உழவு தொழிலை வேளாளர்கள் தோற்றுவித்த பிறகுதான் உண வுக்கும் உடைக்கும் உறைவிடத்திற்கும் மிடிப்பட்ட துன்ப வாழ்க்கை நீங்கிற்று ; உணவுக்காக விலங்கினங்களைக் கொல்லுங் கொலைத்தொழில் நீங்கிற்று., விளைந்த நெல் துவரை முதலான பண்டங்களைத் தம்போற் பசியால் வருந்தும் ஏனை மக்கட்கும் பகுத்துக்கொடுக்கும் ஈர நெஞ்சமும் ஈகையுங் கிளைப்பவாயின ; விளைந்த பண்டங் களைப் பாதுகாத்து வழங்குதற்கு அரசனும் நாடுநகரங் களுஞ் செல்வமுங் கல்வியும் இன்பவாழ்க்கையும் இறைவன் வழிபாடும் ஒன்றன் மேலொன்றாய்ப் பெருகலாயின. இன்னும் மிகுத்துக்கூற வேண்டுவதென் ! இஞ்ஞான்றை மக்கட்கு வந்துள்ள நாகரிக வாழ்வெல்லாம் பண்டும் இன்றும் வேளாளர் கண்டறிந்து நடாத்தும் உழவினால் வந்தனவேயாமென் றுணர்ந்துகொள்ளல் வேண்டும் .
இங்ஙனம் எல்லாத் தொழிலிலுஞ் சிறந்ததாய் , எல்லார் உயிர்வாழ்க்கைக்கும் இன்றியமையாததாய் உள்ள உழவு தொழிலைப் பண்டுதொட்டு நடாத்திவரும் வேளாளர் கொலையும் புலையும் நீக்கி நாகரிகத்திற் சிறந்தாராய் விளங்கு தலின் அவரது பெருமை பழைய நல்லாசிரியர் இயற்றிய தமிழ்நூல்களிற் பாராட்டப்பட்டிருப்பதோடு , அஃது இன்றுகாறும் மங்காது ஏனை யெல்லா வகுப்பினர்க்குரிய பெருமையினும் மிக்கு விளங்காநிற்கின்றது . இவர்கள் தமக்குள்ள அறிவின் றிறத்தாற் , காலமறிந்து நிலத்தைத் திருத்தி வளம்படுத்தி நெல் முதலான நன்செய்ப்பயிரும் துவரை முதலான புன்செய்ப்பயிரும் விளைவித்து , அவற் றால் வரும் பயன்களைத் தாமும் உண்டு பிறரும் உண்ணக் கொடுத்து , யாடு மாடு மீன் முதலான மற்றை உயிர்களைக் கொல்லாமலும் , கொன்று அவற்றின் ஊனைத் தின்னாமலும் அருளொழுக்கத்தில் இன்று கா றுந் தலைநின்று வருகின்றார் கள் .
இவர்களது உண்மைப் பெருமையினை யுள்ளவா றுணர்ந்தே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் ,
உழுவார் உலகத்தார்க்கு ஆணி. ”
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் . எனவும் ,
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய் தூண் மாலையவர் . எனவும் ,
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை